Wednesday, January 30, 2019

9. கற்பகக் கபாலி


கற்பகக் கபாலி

பெற்றிலேன் என்றிந்தப்பேதை புலம்பியொன்றுங்
கற்றிலேனாயினும் நினைப் பாடுகின்ற பேறுபெற்றேன்
கற்பகம் உடனுறை மயிலைவாழ் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம் பணிந்தே உய்வுற்றேனே

சொற்றமிழ் இலக்கணம் கற்றவர் அனேகமிங்குயென்
இற்றமிழ் கேட்கவோ நாயேனை நம்பினை
அன்னை உடனுறை மயிலைவாழ் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம் பணிந்தே உய்வுற்றேனே

நாச்சிய நாயேனையும் மெச்சியே கரம்பிடித்து
முற்றிய மேதகு  ஞானப்பொரு ளுரைத்தாய்
திருச்சிற்றம்பலம் மதி லாடும் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம் பணிந்தே உய்வுற்றேனே

உற்ற உன்னமுதூட்டி உருவாக்கினாய் என்னையுன்
பொற்பாதம் பாடிடவே புலமில னாயினும்
நற்றமிழ் ஊட்டியே நவின்றிடச்செய்த கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம் பணிந்தே உய்வுற்றேனே

பெற்றவள் அன்னையவள் பரிவுடனே வந்திட்டாள்
கற்பிக்கக் குமரனவன் கனிவுடனே வந்திட்டான்
அற்புதம் நிகழ்த்திடும் அருமயிலைக் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம் பணிந்தே யிங்குஉய்வுற்றேனே

Sunday, January 27, 2019

7. திருவடிதீட்சை


              திருவடிதீட்சை

நீளநெடும் விசும்பு நெடிதுயர்ந்த உந்தன்பாதம்
காலகாரகனைக் கடிந்ததோர் பொன்மலர்ப் பாதம்
பாழும்மென் நெற்றிதன்னில் படிந்திட்ட பத்மபாதம்
சுத்தமதாக்கி யாங்கோர் கோலமதிட்ட பாதம்

சித்தர்களும் தேவர்களும் தேடித்தெரிசிக்கும் பாதம்
அச்யுதனும் நான்முகனும் அமரர்களு  மணையும் பாதம்
அன்னையுமை என்றுமன்புடனே பணியும் பாதம்
பக்தனெனை நாடிவந்து சிந்தையிலேயாடிய பாதம்

ஓங்குகின்ற குண்டலியில் ஊர்த்துவமான பாதம்
ஓதுவார் உயர்ந்தோர்கள் உய்யவேகாணும் பாதம்
பாவமதாகிய பத்தும்பையவே உதைக்கும் பாதம்
பாரினிலே பாமரனெனக்கும் பரிந்த்திட்டேவந்த பாதம்

அர்த்தமதாகிய  பாதம் பந்தமெல்லா மராவும் பாதம்
சொந்தமது நீயோருவனென்றே சொல்லிடவைக்கும் பாதம்
அண்டமெல்லாம் நின்றன் றாக்கியே ஆடியபாதம்
பிண்டமதாகிய இதைப் பேணிடவேவந்த பாதம்

சுந்தரியாம் அன்னையவள் நெஞ்சகத்துநிற்கும் பாதம்
பந்தமில் வாழ்வுதனைப் பக்தருக்களிக்கும் பாதம்
ஐங்கரனும்  ஆறுமுகனும் அன்புடனேதொழுகின்ற பாதம்

பிள்ளையிவன் நெற்றிதனில் தன்நாமமதை நாட்டியதே

Saturday, January 26, 2019

6. சித்தமெல்லாம் சிவமயம்





           சித்தமெல்லாம் சிவமயம்

வித்துக்கு வித்தாய் வித்தகனே நீயெனக்குச்
சொத்துக்குச் சொத்தாய் செல்வமானாய் பூமிதன்னில்
பத்துக்கு பத்தும் பாங்காக வருள்புரிந்து
பண்ணிய பாவமதைப் பழவினையைப்  போக்கிடுவாய்

சொல்லிய நாமமது சுந்தரனே யுன்னதுவே
தெள்ளிய சிந்தையுள்ளே நமசிவய ஐந்தெழுத்தே
பற்றிய நாமமது சங்கரனே உன்னதுவே
பங்கமில் வாழ்வுதனைப் பக்தனுக்கு அருளிடுவாய்

செவ்விய மேல்முலையாள் சுந்தரியாம் அன்னையவள்
அங்கம் அன்புடனே திகழ்தோளில் சேர்த்தவனே
அப்பனே அன்பே என்னாருயிரே செய்திடுவாய்
அற்புதமே நற்புவியில் எம்சொற்பதங்கள் காத்திடுவாய்

சித்தனே ஞானச் சூரியனே நற்றமிழே
சித்தமெல்லாம் நிறைந்தெமைச் சிறப்புடனே யாண்டுகொண்டாய்
பக்தனிவன்  பணிந்தேத்த்தும் பசுபதி நீயெனை
பற்றிய வினைகளெல்லாம் சுவடற ஒழித்திடுவாய்

ஊற்றுக்கடை திறந்த உத்தமனே நின்பாதம்
சாற்றுகின்றேன் நான் போற்றுகின்றேன் எப்போதும்
கந்தனுக்கருள் செய்துக் காத்திட்டக் காவலனே
எந்தனுக்கருள் செய்துச் சேர்த்திடுவா யுன்னுடனே

5. கைதொழுவேன் நான்


             கைதொழுவேன் நான்

 அப்பனை அண்ணலை அடியார்க்குத் தேசிகனை
சுப்பனுக் கப்பனை சுடலைமாட வாசகனை
உத்தமர்க்கருள் செய்யும் உயர்வான நாயகனை
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்.

ஆனந்த சோதியை அறியாத மானுடர்க்கு
பொற்பாதம் தூக்கியே ஓங்கிய  வழிதந்தான்
சிந்தயெல்லாம் அவன் சிவபுரத்தைச் சேர்ந்திடவே
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்

வீம்பும் விதண்டமும் தயங்கியெனைத் தொடாதோட
வம்பும் வழக்குகளும் வாராது போய்விடவே
தெம்பும் திறங்களுமே சீராக ஆக்கித்தந்தான்
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்

முக்தியைத் தந்திடும் உயர்வான வித்தகனை
சக்தியைச் சார்ந்திடும் சதுர்மறைச்  சோரனை
பற்றியே பணிந்தே பார்போற்ற வாழ்ந்திடவே
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்.

சித்தமெல்லாம் இங்குச் சிவமயமே ஆக்கிவிட்டாய்
சத்தமெல்லாம் நிறுத்தி சத்தியவழி காட்டிவிட்டாய்
மேன்மையி லேறிடும் முருகோனை உதிர்த்தவனை
கைப்பிடித்தேன் வாழ்வின் வளமெல்லாம் வந்திடவே

Thursday, January 24, 2019

4. அற்புதக் கூத்தனருள்


             அற்புதக் கூத்தனருள்

கனவிலும் நனவிலும் கசிந்துருகி உந்தன்
தாமரைப் பாதமே பிடித்திருந்தேன் எந்தை
சித்தர்கருள்  செய்த சிதம்பர நாதனவன்
பொன்மலர்ப் பாதமே பிடித்து உய்ந்தேன்

கருப் பொருளாகிய முதற்பொருளே எந்தன்
கற்பனைக் காக்கிரம் அருளிய வித்தே
அற்புத மாயிரம் ஆக்கினையே எந்தை
சொற் பதங் கோடியே சேர்த்தனையே

வாழ்நாள் வீழ்நாள் படாமை யாக்கிடும்
போதன் பரமன் புண்ணியன் என்சிந்தை
வந்துள் மேவிய தத்துவ ஞானத்தைச்
சத்தியமே செய்து  சர்ந்திடுவேன்

கருணையின் வடிவினன் அருணையில் அமர்ந்தவன்
கற்பகம் அவன்கழல் சேர்ந்திருந்தேன் அன்பே
அற்புத மாக்கிடும் அவன்பாதம் காணவே
சிந்தை எல்லாம் விட்டு விழித்திருந்தேன்

சுரக்கவே ஊறிடும் சிந்தையுள் வேதங்கள்
கறக்கவே ஊறிடும் கற்பனை யாயிரம்
கந்தனவன் தந்தை பற்றிய பேரையெல்லாம்
காத்திடுவான் வீடு சேரத் திடிடுவானே

Wednesday, January 23, 2019

3. பரஞானம் பகுதி 2.

                           பரஞானம்

அஞ்சேல் என்றுவந் தாட்கொண்ட அமரனவன்
கொஞ்சல் வாய்மொழியுமை சென்றுசேருகின்ற சோரனவன்
நல்லோர்கள் அந்நால்வர் சிந்தையுள் சோதியவன்
பொல்லார்கள் மனங்களெல்லாம் பொடிப்பொடியா யாக்குபவன்

நச்சிய நல்லோர்க்கெல்லாம் நாதவழிகாட்டிடுவான்
செப்பிய செந்நாவுக்கெல்லாம் சிறப்புகள் செய்திடுவான்
முக்தியை வேண்டியிங்கே முனைந்து நிற்போர்க்கெல்லாம்
நற்றுணை வழியாக நாட்டிடுவான் அவன்பாதம்

சத்திய நான்மறை போற்றுகின்ற வித்தகனவன்
முற்றிய பொருள்கூற முனைந்தே வந்தாட்கொண்டான்
செப்பிய வார்த்தைக்கெல்லாம் செழுமையான பொருள்தந்தான்.
சித்தமல மகற்றியெனக்குச் சிவஞான வழிதந்தான்.

மூடிமூடிமூடி மூடிவைத்த என் னகத்துள்
நாடிநாடிநாடி வந்து நாட்டிக்கொண்ட நாயகன்
கோடிகோடிகோடியே கொண்டு சென்று கொடுத்தாலும்
பாடிநின்ற பக்தருக்கே பாதம்காட்டும் நாதனவன்

பெற்றவள் அன்னைசக்தி யுற்றவள் அவன்றுணைதானே
அவள்நற்றாள் கமலம்நாடியே யிங்கு உய்ந்திடுவேனே
நாணிய  நான்முகனைக் கட்டிய வேலவனை
பற்றியே பணிந்துநின்று முற்றியபொருள் கற்றவன்

Friday, January 18, 2019

2. பரஞானம் பகுதி 1



              பரஞானம்

கள்ளப் புலனைந்தின் கயமையைக் கட்டுலைக்க  
மெல்லவே எனைவந் தாட்கொண்ட எந்தையே
எந்தையே எம்பிரான் என்தம்பிரனான் நீயே
என்முந்தை வினைகளெல்லாம் முறியவே செய்திட்டாய்

ஓங்கிஉயர்ந்த சோதிநீ என்னுட்கலந்த சோதிநீ
தாங்கிநிற்குஞ் சோதிநீ  எனைத்தடுத்தாட்கொண்ட சோதிநீ
உருவில்லா அறுவன்நீ வெண்ணீறு விருப்பன்நீ
ஆசனம் கொடுத்துனை என்னங்கமாய் யமர்த்திவிட்டேன்

பேசநா வெழாது புன்கண்ணீர் புரண்டோட
புறமெல்லாம் போற்றுகின்ற புண்ணியனைப் பாடுகின்றேன்
எல்லையிலா சோதியவன் எங்குந் நிறைந்தவன்
வந்திருந் தென்னுளின்று நிறைவாய் அமர்ந்திட்டான்

முப்புறமும் அப்புறமாய் மெல்லவே சிரித்தவன்
சீரான தயாளனவன் என்சிந்தையுள் எழுந்தவன்
நெஞ்சுருக அன்பொழுக விருந்தொன்று வைத்திட்டால்
பஞ்சமெல்லாந் தீர்த்திடுவான் பாழாக விடமாட்டான்

கொஞ்சிடும் வஞ்சியரெல்லாம் வந்திங்கு வாழ்த்திடவே
விஞ்சிடும் அருளாளனவன் என்அன்னையின் காதலன்
மெச்சிய நாவுக்கெல்லாம் மேலான விருந்தாவான்
பற்றிய பக்தருக்கெல்லாம் பரஞானம் அளித்திடுவான்

Tuesday, January 15, 2019

1. விநாயகர் துதி காப்பு


விநாயகர் துதி
அறுமுகன் அண்ணனை ஆனை முகத்தானைக்
கூறும் அடியார்க்குக் குறைகள் மறையுமே

முன்னை முதல்வனை ஆதிமூல மானவனை
சிந்தித் திருப்போர்க்கு சிறப்புகள் சேருமே

சொற்பொரு ளானவனை சொல்லற் கரியவனை
சென்றடிச் சேர்ந்தோர்க்கு சோர் வறுமாமே

மத்தள வயிறோனைச் சித்தியை சேர்ந்தோனை
புத்தியில் வைத்தோர்க்குப் புவனமு மாமே

வினைத் தொடர்களைபவனை விக்கினம் நீக்குவோனை
விதிஎன்றுக் கிடப்போர்க்கு விதி மதியாமே

சக்தியின் குமாரனை அமரர்க்கு முதல்வோனை  
அண்டியே வாழ்வோர்க்கு அனைத்து மாமே

கோலக் குருபரனை வள்ளியிடம் சேர்த்தோனை
வந்தடிச் சேர்ந்தோர்க்கு வாழ்வது வளமே


                        காப்பு
உள்ளொளி ஓங்கியே ஓர்முகமானது  தண்ணொளிப் பெருஞ்சுடர்
தாங்கியே நின்றது
உன்மத்தமாக்கி ஊரதில்சேர்த்திட என்சித்தமெல்லாம்                                                            தான்ஆட்கொண்டதுவே
உள்ளும்புறமும்  ஒன்றெனச்  சேர்ந்தது  உருவாயும் அருவாயும்
                                           கருவாயும் ஆனது
பிழைஏதும் வாராதென்னைக் காத்தென்றும் நிற்கவே.






Copyright ©2019 Writer Ravikumar

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2019 எழுத்தாளர் ரவிக்குமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

11 பொற்பதம் நாடு

         பொற்பதம் நாடு அச்சிறு குறைபிறையை நிமிர்ந்த பொன்முடியில் சூடி அங்கையில் மான் மாழுவோடொறு சங்கதனையும் சூடி கங்கையோடொறு மங்க...