Saturday, January 26, 2019

5. கைதொழுவேன் நான்


             கைதொழுவேன் நான்

 அப்பனை அண்ணலை அடியார்க்குத் தேசிகனை
சுப்பனுக் கப்பனை சுடலைமாட வாசகனை
உத்தமர்க்கருள் செய்யும் உயர்வான நாயகனை
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்.

ஆனந்த சோதியை அறியாத மானுடர்க்கு
பொற்பாதம் தூக்கியே ஓங்கிய  வழிதந்தான்
சிந்தயெல்லாம் அவன் சிவபுரத்தைச் சேர்ந்திடவே
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்

வீம்பும் விதண்டமும் தயங்கியெனைத் தொடாதோட
வம்பும் வழக்குகளும் வாராது போய்விடவே
தெம்பும் திறங்களுமே சீராக ஆக்கித்தந்தான்
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்

முக்தியைத் தந்திடும் உயர்வான வித்தகனை
சக்தியைச் சார்ந்திடும் சதுர்மறைச்  சோரனை
பற்றியே பணிந்தே பார்போற்ற வாழ்ந்திடவே
கைப்பிடித்தே என்றுங் கனிவாகக் கைதொழுவேன்.

சித்தமெல்லாம் இங்குச் சிவமயமே ஆக்கிவிட்டாய்
சத்தமெல்லாம் நிறுத்தி சத்தியவழி காட்டிவிட்டாய்
மேன்மையி லேறிடும் முருகோனை உதிர்த்தவனை
கைப்பிடித்தேன் வாழ்வின் வளமெல்லாம் வந்திடவே

No comments:

Post a Comment

Copyright ©2019 Writer Ravikumar

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2019 எழுத்தாளர் ரவிக்குமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

11 பொற்பதம் நாடு

         பொற்பதம் நாடு அச்சிறு குறைபிறையை நிமிர்ந்த பொன்முடியில் சூடி அங்கையில் மான் மாழுவோடொறு சங்கதனையும் சூடி கங்கையோடொறு மங்க...