அற்புதக் கூத்தனருள்
கனவிலும் நனவிலும் கசிந்துருகி உந்தன்
தாமரைப் பாதமே பிடித்திருந்தேன் எந்தை
சித்தர்கருள் செய்த
சிதம்பர நாதனவன்
பொன்மலர்ப் பாதமே பிடித்து உய்ந்தேன்
கருப் பொருளாகிய முதற்பொருளே எந்தன்
கற்பனைக் காக்கிரம் அருளிய வித்தே
அற்புத மாயிரம் ஆக்கினையே எந்தை
சொற் பதங் கோடியே சேர்த்தனையே
வாழ்நாள் வீழ்நாள் படாமை யாக்கிடும்
போதன் பரமன் புண்ணியன் என்சிந்தை
வந்துள் மேவிய தத்துவ ஞானத்தைச்
சத்தியமே செய்து சர்ந்திடுவேன்
கருணையின் வடிவினன் அருணையில் அமர்ந்தவன்
கற்பகம் அவன்கழல் சேர்ந்திருந்தேன் அன்பே
அற்புத மாக்கிடும் அவன்பாதம் காணவே
சிந்தை எல்லாம் விட்டு விழித்திருந்தேன்
சுரக்கவே ஊறிடும் சிந்தையுள் வேதங்கள்
கறக்கவே ஊறிடும் கற்பனை யாயிரம்
கந்தனவன் தந்தை பற்றிய பேரையெல்லாம்
காத்திடுவான் வீடு சேரத் திடிடுவானே
No comments:
Post a Comment