பரஞானம்
அஞ்சேல் என்றுவந் தாட்கொண்ட அமரனவன்
கொஞ்சல் வாய்மொழியுமை சென்றுசேருகின்ற சோரனவன்
நல்லோர்கள் அந்நால்வர் சிந்தையுள் சோதியவன்
பொல்லார்கள் மனங்களெல்லாம் பொடிப்பொடியா யாக்குபவன்
நச்சிய நல்லோர்க்கெல்லாம் நாதவழிகாட்டிடுவான்
செப்பிய செந்நாவுக்கெல்லாம் சிறப்புகள் செய்திடுவான்
முக்தியை வேண்டியிங்கே முனைந்து நிற்போர்க்கெல்லாம்
நற்றுணை வழியாக நாட்டிடுவான் அவன்பாதம்
சத்திய நான்மறை போற்றுகின்ற வித்தகனவன்
முற்றிய பொருள்கூற முனைந்தே வந்தாட்கொண்டான்
செப்பிய வார்த்தைக்கெல்லாம் செழுமையான பொருள்தந்தான்.
சித்தமல மகற்றியெனக்குச் சிவஞான வழிதந்தான்.
மூடிமூடிமூடி மூடிவைத்த என் னகத்துள்
நாடிநாடிநாடி வந்து நாட்டிக்கொண்ட நாயகன்
கோடிகோடிகோடியே கொண்டு சென்று கொடுத்தாலும்
பாடிநின்ற பக்தருக்கே பாதம்காட்டும் நாதனவன்
பெற்றவள் அன்னைசக்தி யுற்றவள் அவன்றுணைதானே
அவள்நற்றாள் கமலம்நாடியே யிங்கு உய்ந்திடுவேனே
நாணிய நான்முகனைக் கட்டிய வேலவனை
பற்றியே பணிந்துநின்று முற்றியபொருள் கற்றவன்
No comments:
Post a Comment