சீர்கள்தரும் சின்முத்திரை
அண்டமெல்லாம் சென்று ஆளுகின்ற முத்திரை
ஆகம வேதமதன் மூலமான
முத்திரை
சித்தமல மகற்றிச்
சீர்கள்தரும் முத்திரையென்
சிந்தையுள்
எழுந்துவந்துச் சேர்ந்திட்ட முத்திரை
கட்டிய கலமிதனைக்
கரைசேர்க்கும் முத்திரை
வையகத்தில்
உள்ளோர்க்கெலாம் வாழ்வளிக்கும் முத்திரை
பற்றிய நால்வரையும்
பரம்சேர்த்த முத்திரை
வெந்தகமென்
மனத்துள் வாழ்ந்திருக்கும் முத்திரை
ஆதியும் சோதியுமாய்
யமர்ந்திட்டதோர் முத்திரை
நாடியேவந்த
நால்வற்கும் உரைத்திட்டாய் அம்முத்திரை
கோடிக்கோடித்
தேவர்களும் போற்றுகின்ற முத்திரை
ஆதியோ டந்தமு மிலாதுமாகும் முத்திரை
ஆரணங்கு அன்னையவள்
அணைத்துக்கொள்ளும் முத்திரை
பாடியேயுனைப்
பணிந்தவர்க்குப் பாலமாகும் முத்திரை
தேடியேயெங்குந்
திரிந்திட்டாலும் தெரிந்திடாத முத்திரை
நாடியே
உம்முளே நீ கண்டுகொள் அம்முத்திரை
மூண்டெழுந்து
மூலக்கனலூட்டி முக்திதரும் முத்திரை
சக்தியும்
சிவனுமாய் அமர்ந்திட்டதோர் முத்திரை
வேலவனின் மாமனவன்
பணிந்திட்ட முத்திரை
தரணியிலே
நல்லோர்க்கெல்லாம் நன்மைத் தரும் சின்முத்திரை
No comments:
Post a Comment