Saturday, May 4, 2019

10. அனைத்துமாவது நீறு



                           அனைத்துமாவது நீறு
அன்பது வாவது நீறு அருமறையாவது நீறே
ஆக்கலுமாவது நீறு மெய்யானந்தமாவது நீறே
இகபரசுகமது நீறு எங்களின்னல்கள் தீர்ப்பது நீறே
அஞ்சலைத் தீர்ப்பது நீறு செஞ்சடையான்தாள் வெண்ணீறே

ஈதலுமாவது நீறு ஈனம் முறிப்பதுவும் நீறே
உன்னதவேதமும் நீறு அத நுண்மையுமாவது நீறே
ஊனை உயர்ப்பது நீறு ஊர்த்துவம் சேர்ப்பதுவும் நீறே
ஈரைந்து வாயுவும் நீறு அஞ்சடக்கியான் தாள் வெண்ணீறே

எழுமையுந் தீர்ப்பது நீறு எண்ணியக் கருமமும் நீறே
ஏழுசுரங்களும் நீறே ஏகாந்தமாக்குவதும் நீறே
ஐந்தெழுத்தாவதும் நீறு ஐம்புலன் எரிப்பதுவும் நீறே
ஒன்பது வாசனும் நீறு கூற்றுவனை ஓட்டினான் வெண்ணீறே

ஓங்காரமாவது நீறு ஓர்முகமாக்குவதுவும் நீறே
ஓளவைக்கு அணிகலன் நீறு மெய் யவுசதமாவதுவும் நீறே
அ ஃதை அவ்வெண்ணீறை இஃதே அணிந்துகொள் உன்
ஒண்டிய பிணிகள் தள்ளி அண்டியவனடி சேர்க்கும்

அன்பது மாக்கலும் ஆனந்தஞ் சேர்த்தாலும்
இன்னல்கள் தீர்ப்பதும் ஈனத்தை மாய்ப்பதும்
ஈஸ்வரியாவதும் நேசக்குமரனும்
ஈசனவன் தாள் வெண்ணீறே  

No comments:

Post a Comment

Copyright ©2019 Writer Ravikumar

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2019 எழுத்தாளர் ரவிக்குமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

11 பொற்பதம் நாடு

         பொற்பதம் நாடு அச்சிறு குறைபிறையை நிமிர்ந்த பொன்முடியில் சூடி அங்கையில் மான் மாழுவோடொறு சங்கதனையும் சூடி கங்கையோடொறு மங்க...