கற்பகக் கபாலி
பெற்றிலேன்
என்றிந்தப்பேதை புலம்பியொன்றுங்
கற்றிலேனாயினும்
நினைப் பாடுகின்ற பேறுபெற்றேன்
கற்பகம் உடனுறை
மயிலைவாழ் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம்
பணிந்தே உய்வுற்றேனே
சொற்றமிழ் இலக்கணம்
கற்றவர் அனேகமிங்குயென்
இற்றமிழ் கேட்கவோ
நாயேனை நம்பினை
அன்னை உடனுறை
மயிலைவாழ் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம்
பணிந்தே உய்வுற்றேனே
நாச்சிய நாயேனையும்
மெச்சியே கரம்பிடித்து
முற்றிய மேதகு ஞானப்பொரு ளுரைத்தாய்
திருச்சிற்றம்பலம்
மதி லாடும் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம்
பணிந்தே உய்வுற்றேனே
உற்ற உன்னமுதூட்டி
உருவாக்கினாய் என்னையுன்
பொற்பாதம் பாடிடவே
புலமில னாயினும்
நற்றமிழ் ஊட்டியே
நவின்றிடச்செய்த கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம்
பணிந்தே உய்வுற்றேனே
பெற்றவள் அன்னையவள்
பரிவுடனே வந்திட்டாள்
கற்பிக்கக்
குமரனவன் கனிவுடனே வந்திட்டான்
அற்புதம்
நிகழ்த்திடும் அருமயிலைக் கபாலீச்சரா
நின்பொற்றாள் கமலம்
பணிந்தே யிங்குஉய்வுற்றேனே
No comments:
Post a Comment