திருவடிதீட்சை
நீளநெடும்
விசும்பு நெடிதுயர்ந்த உந்தன்பாதம்
காலகாரகனைக்
கடிந்ததோர் பொன்மலர்ப் பாதம்
பாழும்மென்
நெற்றிதன்னில் படிந்திட்ட பத்மபாதம்
சுத்தமதாக்கி
யாங்கோர் கோலமதிட்ட பாதம்
சித்தர்களும்
தேவர்களும் தேடித்தெரிசிக்கும் பாதம்
அச்யுதனும்
நான்முகனும் அமரர்களு மணையும் பாதம்
அன்னையுமை
என்றுமன்புடனே பணியும் பாதம்
பக்தனெனை
நாடிவந்து சிந்தையிலேயாடிய பாதம்
ஓங்குகின்ற
குண்டலியில் ஊர்த்துவமான பாதம்
ஓதுவார்
உயர்ந்தோர்கள் உய்யவேகாணும் பாதம்
பாவமதாகிய
பத்தும்பையவே உதைக்கும் பாதம்
பாரினிலே
பாமரனெனக்கும் பரிந்த்திட்டேவந்த பாதம்
அர்த்தமதாகிய பாதம் பந்தமெல்லா மராவும் பாதம்
சொந்தமது
நீயோருவனென்றே சொல்லிடவைக்கும் பாதம்
அண்டமெல்லாம்
நின்றன் றாக்கியே ஆடியபாதம்
பிண்டமதாகிய
இதைப் பேணிடவேவந்த பாதம்
சுந்தரியாம்
அன்னையவள் நெஞ்சகத்துநிற்கும் பாதம்
பந்தமில்
வாழ்வுதனைப் பக்தருக்களிக்கும் பாதம்
ஐங்கரனும் ஆறுமுகனும் அன்புடனேதொழுகின்ற பாதம்
பிள்ளையிவன்
நெற்றிதனில் தன்நாமமதை நாட்டியதே
No comments:
Post a Comment