விநாயகர் துதி
அறுமுகன் அண்ணனை ஆனை முகத்தானைக்
கூறும் அடியார்க்குக் குறைகள் மறையுமே
முன்னை முதல்வனை ஆதிமூல மானவனை
சிந்தித் திருப்போர்க்கு சிறப்புகள் சேருமே
சொற்பொரு ளானவனை சொல்லற் கரியவனை
சென்றடிச் சேர்ந்தோர்க்கு சோர் வறுமாமே
மத்தள வயிறோனைச் சித்தியை சேர்ந்தோனை
புத்தியில் வைத்தோர்க்குப் புவனமு மாமே
வினைத் தொடர்களைபவனை விக்கினம் நீக்குவோனை
விதிஎன்றுக் கிடப்போர்க்கு விதி மதியாமே
சக்தியின் குமாரனை அமரர்க்கு முதல்வோனை
அண்டியே வாழ்வோர்க்கு அனைத்து மாமே
கோலக் குருபரனை வள்ளியிடம் சேர்த்தோனை
வந்தடிச் சேர்ந்தோர்க்கு வாழ்வது வளமே
காப்பு
உள்ளொளி ஓங்கியே ஓர்முகமானது தண்ணொளிப் பெருஞ்சுடர்
தாங்கியே நின்றது
உன்மத்தமாக்கி ஊரதில்சேர்த்திட என்சித்தமெல்லாம்
தான்ஆட்கொண்டதுவே
உள்ளும்புறமும் ஒன்றெனச் சேர்ந்தது உருவாயும் அருவாயும்
கருவாயும்
ஆனது
பிழைஏதும் வாராதென்னைக் காத்தென்றும் நிற்கவே.
No comments:
Post a Comment