பொற்பதம் நாடு
அச்சிறு குறைபிறையை நிமிர்ந்த
பொன்முடியில் சூடி
அங்கையில் மான் மாழுவோடொறு சங்கதனையும்
சூடி
கங்கையோடொறு மங்கையைத் தன்னிடப்புரத்தில் கூடி
நின்ற நிர்மலனவன் பொற்பதமே நாடு
அண்டமோ டகண்டமாமிப் பிரபஞ்சமெல்லாம்
ஆடி
கொன்றை மலர்கள் திங்கள் முடிமேலே
சூடி
பொங்கை திரைநெரித்த புண்ணியளைக்
கூடி
நின்ற விமலனவன் பொற்பதமே நாடு
விஞ்சிட்ட அரக்கர்களைத் தன்
சூலமதால் சாடி
வழ்த்திட்ட தேவர்களோ கோடிபலக்
கோடி
விதிர்த்திட்ட தன்பாதியைப் பூமிதனில் தேடி
வந்திட்ட நாதனவன் பொற்பதமே நாடு
சிற்றம்பலமாமப் பொன்னம் பலத்தி
லாடி
சித்தர்களோடு நால்வரவர் சிந்தையுளே கூடி
பாசமுடன் பிள்ளையிவன் பாவமதைச் சாடி
அமர்ந்திட்ட போதானவன் பொற்பதமே
நாடு
வித்தகங்கள் பேசிவீண் விருதவா
யலைந்திடாது நமை
வாழ்விக்கவந்த பொற்பதங்கள் நாடியே
திரிந்திங்கு
வாழ்கின்ற காலமெல்லாம் நின்திருப்புகழையே
பாடி
வந்திட்ட பக்தர்களுக்கு வாழ்த்துக்களோ
கோடி