Tuesday, May 7, 2019

11 பொற்பதம் நாடு


         பொற்பதம் நாடு

அச்சிறு குறைபிறையை நிமிர்ந்த பொன்முடியில் சூடி
அங்கையில் மான் மாழுவோடொறு சங்கதனையும் சூடி
கங்கையோடொறு மங்கையைத்  தன்னிடப்புரத்தில் கூடி
நின்ற நிர்மலனவன் பொற்பதமே நாடு

அண்டமோ டகண்டமாமிப் பிரபஞ்சமெல்லாம் ஆடி
கொன்றை மலர்கள் திங்கள் முடிமேலே சூடி
பொங்கை திரைநெரித்த புண்ணியளைக் கூடி
நின்ற விமலனவன் பொற்பதமே நாடு

விஞ்சிட்ட அரக்கர்களைத் தன் சூலமதால் சாடி
வழ்த்திட்ட தேவர்களோ கோடிபலக் கோடி
விதிர்த்திட்ட  தன்பாதியைப் பூமிதனில் தேடி
வந்திட்ட நாதனவன் பொற்பதமே நாடு

சிற்றம்பலமாமப் பொன்னம் பலத்தி லாடி
சித்தர்களோடு  நால்வரவர் சிந்தையுளே கூடி
பாசமுடன் பிள்ளையிவன்  பாவமதைச் சாடி
அமர்ந்திட்ட போதானவன் பொற்பதமே நாடு

வித்தகங்கள் பேசிவீண் விருதவா யலைந்திடாது நமை
வாழ்விக்கவந்த பொற்பதங்கள் நாடியே திரிந்திங்கு  
வாழ்கின்ற காலமெல்லாம் நின்திருப்புகழையே பாடி
வந்திட்ட பக்தர்களுக்கு வாழ்த்துக்களோ கோடி

Copyright ©2019 Writer Ravikumar

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2019 எழுத்தாளர் ரவிக்குமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

11 பொற்பதம் நாடு

         பொற்பதம் நாடு அச்சிறு குறைபிறையை நிமிர்ந்த பொன்முடியில் சூடி அங்கையில் மான் மாழுவோடொறு சங்கதனையும் சூடி கங்கையோடொறு மங்க...